News March 28, 2025
ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம் அரசு செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, என பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News March 31, 2025
மருதமலைக்கு வாகனங்களில் செல்ல தடை

கோவை மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 4ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, ஏப்.1 மாலை 5 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். எனவே வரும் (ஏப்.4-6) வரை மலை மீது வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News March 31, 2025
கோவை: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

கோவை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
News March 30, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால் தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.