News August 31, 2024
ஓய்வூதியர்கள் மனுக்கள் அனுப்ப கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமை–யில் நடைபெறுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரட்டை பிரதியில் செப் 30-ந் தேதிக்குள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
கிருஷ்ணகிரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

கிருஷ்ணகிரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
கிருஷ்ணகிரியில் கடன் தீர்க்கும் கணபதி!

கிருஷ்ணகிரி, பாகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். இங்கு மூலவரான விநாயகர் ஆவுடை மீது வலது கையில் உடைந்த தந்ததுடனும் இடது கையில் கொழுக்கட்டையுடன் அருள்பாலிக்கிறார். கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவரை ‘கடன் தீர்க்கும் கணபதி’ என அழைக்கின்றனர். ஷேர்!
News August 27, 2025
ஓசூரில் பைக்கில் மெதுவாக செல்ல சொன்னவர் கொலை!

கிருஷ்ணகிரி, ஓசூர், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (32) வசிக்கும் தெரு வழியாக, 15 வயது சிறுவன் அடிக்கடி பைக்கில் வேகமாக சென்றதால், வெங்கட்ராஜ் சிறுவனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதில் நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவன் என நான்கு பேரை நேற்று (ஆகஸ்ட் 26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.