News October 25, 2024

ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

image

ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இச்சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி மூலமும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

தேனி: ரூ.93,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! APPLY NOW

image

தேனி மக்களே, யூகோ வங்கியில் காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்தவர்கள் பிப். 2ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 93,960 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து உதவுங்க..

News January 29, 2026

தேனி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்

image

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி மஞ்சு. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜாராம் மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்தார். உடனே அங்கு சென்ற போலீசார் மஞ்சுவை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்தனர்.

News January 29, 2026

தேனி: இளம்பெண் தற்கொலை

image

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!