News November 7, 2025
ஓமலூர்: வாட்டர் ஹீட்டரால் பெண் பலி!

ஓமலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி கோமதி (41). குடும்பத்துடன் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில் கோமதி சுடு நீர் வைக்க வாட்டர் ஹீட்டர் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட கோமதியை, மகன்கள் சேலம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரிய வந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 26, 2026
சேலம்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சேலம் மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
சேலம்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சேலம் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 26, 2026
சேலத்தில் டாஸ்மாக் மது விற்பனை 20% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 220 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சராசரியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கடைகள் மூடப்படுவதால், மதுப்பிரியர்கள் நேற்று முன்தினமே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய விற்பனை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


