News March 30, 2025
ஓமலூர் மாணவி தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிலான 18வது சப்ஜூனியர் டென்னிஸ் போட்டி, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தனிநபர் போட்டி ஒற்றையர் பிரிவில், சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த வீராங்கனை தனிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தனிகாவிற்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News April 3, 2025
தோல் வியாதி நீக்கும் சித்தேசுவரர் கோயில்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோயில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையைச் சுற்றி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியைச் சுற்றி கோயிலின் காந்த குளத்தில் போட்டால் தோல் வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 3, 2025
சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் நாளை ரத்து

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News April 3, 2025
சேலத்தில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்!

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை 2 நாட்கள் மட்டும், உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிறசிக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரை, இம்மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!