News April 8, 2025
ஓமலூர் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் தனது உறவினரான சித்தையன், 73. என்பருடன் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி டூவீலரில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென திரும்பியதால், டூவீலர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த நல்லதம்பி உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News November 14, 2025
சேலம்: கொரியர் நிறுவன ஊழியர் தற்கொலை!

சேலம் அடுத்த உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (27) வயதான இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அவர் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
சேலம்: 25,151 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவர்களுக்கும் 55,123 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 178 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 11,317 பேருக்கும் 13,842 மாணவிகளுக்கும் மொத்தம் 25,151 மிதிவண்டி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
News November 14, 2025
சேலத்தில் வேலைவாய்ப்பு: ₹14,000/- சம்பளம்!

சேலத்தில் செயல்பட்டு வரும் VEEJAY GROUP OF COMPANIES-வணிக மேம்பாட்டு நிர்வாகி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குப் பணியமர்த்தப்படுபவர்கள், Company visit ,work orders, promote Steel fabrication போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பளமாக ₹14,000/+Allowance வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்தப் பணியிடத்திற்கு<


