News December 5, 2024
ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ

ஜெ., ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம் என்று சொல்ல தகுதியானவர்கள் நாங்கள்தான் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசுக்கு எதிராக மாறியுள்ளது. DMK அரசின் அலங்கோல நிலையை கண்டிக்க அவர்களது கூட்டணி கட்சிகள் யாரும் தயாராக இல்லை. ஜெ., ஆட்சியை அமைக்கும் தகுதி EPSக்கு தான் உள்ளது என்றும் OPSக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News September 11, 2025
பிரதமருக்கு இப்படி ஒரு பாதுகாப்பா?

ஒரு PM வரும்போது, அவருக்கு ஏன் இத்தனை கார்கள்? அதில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எப்படியான பாதுகாப்பை எதன் அடிப்படையில் வழங்குகின்றனர்? என்று உங்களுக்கு கேள்வி எழுந்திருக்கலாம். இதற்கான பதிலை, விரிவான தகவல்களுடன் மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். இதுபோன்று வேறு ஏதேனும் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள். வரும் நாள்களில் அவை செய்திகளாக வெளியிடப்படும்.
News September 11, 2025
நயினார் நாகேந்திரன் பதவி விலகலா? வெளியான விளக்கம்

BJP தலைவர் பதவியில் இருந்து நயினார் விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார். ‘பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. என் மீது PM மோடி, அமித்ஷா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும், அமித்ஷா எனது வீட்டிற்கு நேரில் வந்து நலம்விசாரித்து சென்றார்’ என விளக்கம் அளித்துள்ளார். உள்கட்சி பூசல், OPS, TTV குற்றச்சாட்டால் அவர் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், விளக்கம் அளித்துள்ளார்.
News September 11, 2025
RECIPE: புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை!

◆உடல் கொழுப்பு குறையவும், ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தவும் ராகி கொள்ளு தோசை உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➥கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
➥பிறகு, இவற்றை தோசை பதத்திற்கு நைசாக அரைத்து கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்து, 6 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
➥இந்த மாவில் தோசை சுட்டு சாப்பிட்டால், சுவையாந் ஹெல்தியான ராகி கொள்ளு தோசை ரெடி. SHARE IT.