News February 27, 2026

ஓபிஎஸ் இணைந்ததும் போடி திமுக நிர்வாகிக்கு ஏமாற்றம்

image

ஒரு தொண்டனாகவே திமுகவில் இணைந்துள்ளதாக OPS தெரிவித்துள்ளார். அதேநேரம், வாய்ப்பளித்தால் 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது போடி தொகுதி MLA-வாகவுள்ள அவர், வரும் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது, அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வந்த Ex MLA லட்சுமணன் & அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Similar News

News February 28, 2026

IUML கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

image

IUML கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன்படி, அக்கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளதாக IUML தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். கடந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இப்போது 2-ஆக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News February 28, 2026

சிறுமி கர்ப்பம்.. 63 வயது முதியவர் வசமாக சிக்கினார்

image

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு போக்சோ கோர்ட் தக்க தண்டனை வழங்கியுள்ளது. நாகர்கோவில் அருகே சிறுமியை கர்ப்பமாக்கியதாக சாமிதாஸ்(63) என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண் பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்கள் என்றுதான் முடிவுக்கு வருமோ?

News February 28, 2026

போர் பதற்றத்தால் IndiGo விமான சேவை ரத்து!

image

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பு கருதி பல்வேறு நாடுகள் தங்களது வான்வழி பாதையை மூடியுள்ளன. இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான தங்களது விமான சேவைகளை ரத்து செய்வதாக IndiGo அறிவித்துள்ளது. மேலும் பிப்.28 அல்லது அதற்கு முன் புக் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான முழு பணத்தை ரிட்டர்ன் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!