News March 26, 2024

ஓபிஎஸ்க்கு ஆதரவாக அண்ணாமலை

image

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

image

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 16, 2026

ராமநாதபுரம்: சாலை விபத்தில் 3 பேர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம், கானா விலக்கு – பெருநாழி சாலையில் பரளச்சி அருகே, சாலையின் நடுவில் பைக் குறுக்கே வந்ததால், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சோலையப்பன் மற்றும் மகன் சோலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலெட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!