News April 9, 2024
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள்

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.9) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News November 9, 2025
நெல்லை: மாநகரில் இரவு காவல் அதிகாரி எண்கள்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ 9) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 9, 2025
நெல்லை: சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து

பாளையங்கோட்டை ஊசி கோரம் அருகே இன்று இரவு வேகமாக சென்ற கார் ஒன்று சாலையின் மையப் பகுதியில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி பக்கவாட்டில் இருந்த பகுதியில் பாய்ந்தது. இதில் காரில் முன் பகுதி நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்தது போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போக்குவரத்தை சீரமைத்தனர்.


