News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
Similar News
News July 6, 2025
குழந்தை பாக்கியம் அருளும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென்திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வைணவத் திருத்தலம். இது “தென் திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் சில ஐதீகங்களும், பூஜை முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
அச்சரபக்கம் ஏரியை காணவில்லை – மக்கள் கவலை

அச்சரப்பாக்கம் ஏரி பல ஆண்டுகளாக எந்த பராமரிக்கும் இல்லாததால் செடி கொடிகள் முட்கள் காடுகளாக மாறி காட்சியளிக்கிறது. இந்த இடம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யும் இடமாக மாறிவிட்டது. நீர்நிலை பறவைகள் சரணாலயமாக இருந்த இடம், அரசு கவனக்குறைவால் இப்படி மாறிவிட்டதை கண்டு பொது மக்கள் மிகவும் கவகையில் உள்ளனர். அரசு இதனை சரி செய்தால், சுற்றுலாத்தலமாக மாறலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News July 6, 2025
பரனுாரில் யானை தந்தம் கடத்தல் – பெண் உட்பட எட்டு பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், பரனுார் சுங்கச்சாவடி அருகில், செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சுங்கச்சாவடி பகுதியில் வேகமாக சென்ற, ‘ஸ்கார்பியோ’ காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்கள் இருந்தன. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், எட்டு பேரை கைது செய்தனர்.