News July 30, 2024
ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம்

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன். இவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் அறிவித்துள்ளார். இன்று காலை 9:45 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா செல்லப்பம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வழங்குகிறார்.
Similar News
News September 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.
News September 4, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.3 நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – வெங்கடாசலம் ( 949869150), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News September 3, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.