News November 30, 2024

ஓட்டப்பந்தய போட்டியில் காஞ்சிபுரம் மாணவி அசத்தல்

image

சென்னை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி, கடந்த நவ.26 – 28 வரை சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கல்லூரி மாணவி வினிதா, 10,000மீ., 5,000மீ., ஓட்டப்பந்தய போட்டியிலும் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.

Similar News

News December 9, 2025

காஞ்சி: உங்க நிலத்தை காணமா??

image

காஞ்சிபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் பண்ணி<<>> LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

News December 9, 2025

காஞ்சி: ரமணா பட பாணியில் நிகழ்ந்த சோகம்…

image

காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக பொற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

News December 8, 2025

காஞ்சி: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!