News May 4, 2024
ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற திருச்சி வீரர்

இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் வல்லத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி பிளாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் சஹான் அகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
Similar News
News August 26, 2025
திருச்சி: தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அறிக்கை

திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் விமலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு இணையதளம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.in.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
திருச்சி: பறவைகள் பூங்கா நாளை செயல்படும்

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
திருச்சி: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!