News April 14, 2024

ஓடும் பேருந்தில் மாணவன் பலி

image

வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 31, 2025

தேனி: வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

image

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் பூதிப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் நடைபயிற்சியில் இருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News October 31, 2025

தேனி கிராமப்புற வங்கியில் வேலை வேண்டுமா… APPLY

image

தேனி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

தேனி:10 வயது சிறுமிக்கு உறவினரால் நேர்ந்த கொடுமை

image

பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை சிறுமியின் உறவினரான பரமேஸ்வரன் என்பவர் 2024.ல் பாலியல் வன்புணர்வுசெய்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.30) பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!