News August 8, 2024
ஓசூர் மருத்துவமனை கட்டிட பணியை ஆய்வு செய்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையில், சுமார் ரூ.100 கோடி மதிப்பில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 31, 2025
கிருஷ்ணகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
ஓசூர்: நாட்டிலே இங்குதான் முதல்முறை!

பெங்களூர்-ஓசூர் இணைக்கும் வகையில், ஓசூர் நகரை சுற்றி 45 கி.மீ 6 வழி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒன்னலவாடி அருகே இந்த சாலையும், பெங்களூரு-சேலம் ரயில் பாதையும் சந்திக்கின்றன. இங்கு ரயில் சேவையை பாதிக்காமல் உயர் தொழில்நுட்பம் மூலம், 40 நாளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்படாமல், முன்கூட்டியே 8 வழி சாலைக்கான பாலமாக அமைக்கப்படுவது நாட்டிலே முதல்முறை என கூறப்படுகிறது.


