News September 27, 2025
ஓசூரை உலுக்கிய சூதாட்ட வழக்கு.. போலீசார் அறிவுறுத்தல்!

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ரூ 8,58,000 பணத்துடன் அவர்கள் சிக்கினர். இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் இணைந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்டம் நடந்தால் பொதுமக்கள் பயப்படாமல் காவல்துறையிடம் தகவல் அளிக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று (செப்-26) அறிவுறுத்தினர்.
Similar News
News January 9, 2026
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியது!

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே, சிக்னல் இன்றி சரக்கு வேன் திடீரென நின்றதால் கார் மற்றும் லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, மற்றொரு கார் பின்னோக்கிச் சென்றதில் கான்கிரீட் லாரி மீது மோதியது. இவ்வாறு மொத்தம் 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News January 9, 2026
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி – இளைஞர் பரிதாப பலி

தளி வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி மாது (38), மது பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 1-ம் தேதி மது போதையில் தவறுதலாக திராவகத்தை (ஆசிட்) குடித்த அவர், மயங்கி விழுந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 9, 2026
கிருஷ்ணகிரியில் 2 பேர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தில் கடந்த டிசம்பர் 12-ம் அன்று தனியார் நிறுவன பேருந்து மீது பன்றி வெடி வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இந்த வழக்கில் சக்திவேல், சேகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.8) சேகர், சக்திவேல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


