News June 27, 2024
ஓசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள மாடா்ன் மாதிரி பள்ளி உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஜூனியா் சதுரங்கப் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டி வரும் ஜூன் 30 வரை 5 நாள் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 மாணவிகள், 150 மாணவா்கள் என மொத்தம் 240 போ் பங்கேற்றுள்ளனர். போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டின் தலைவா் சந்தாடி, செயலாளா் லோகேஷ் தொடங்கி வைத்தனர்.
Similar News
News September 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
கிருஷ்ணகிரி: எச்.ஐ.வி., விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஒழிப்பு குறித்த தீவிர விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி, இன்று (செப்.17) ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
News September 17, 2025
கிருஷ்ணகிரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <