News November 18, 2024
ஓசூரில் புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது

ஒசூர் மாநகர போலீசார் பேருந்து நிலையத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் 21கிலோ புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த பலவேசம் (42), அழகேஷ் (44) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 5, 2026
கிருஷ்ணகிரி: 8 வயது மகனுடன் தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அருகே சந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (31) என்பவர், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில், நேற்று தனது 8 வயது மகனுடன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
News April 5, 2026
கிருஷ்ணகிரி: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் (SST Team-3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (03.04.2026) இரவு, குந்தாரப்பள்ளி – வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.