News January 6, 2026
ஓசூரில் திக் திக் நிமிடங்கள்!

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே வருகைப் பதிவேடு விவகாரம் தொடர்பாக அகதி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் அவரைப் சமாதானப்படுத்தி பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
Similar News
News January 21, 2026
கிருஷ்ணகிரியில் மனதை உலுக்கும் சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த காயத்ரி (16) என்ற சிறுமி, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த காயத்ரி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
கிருஷ்ணகிரி: மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
வேளாண் விதைப்பைகள் திருடிய உதவி அலுவலர் சஸ்பெண்ட்

வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார வேளாண் மையத்தில் ஜன-15 அன்று அரசு விடுமுறை நாளில் உதவி அலுவலர் முருகன் என்பவர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த விதை பைகளை திருடிச் செல்ல முயன்றார். இதுகுறித்து உதவி இயக்குனர் சிவமணி அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசில் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து முருகன் இணை இயக்குனர் காளியப்பன் முருகனை ஜன-20 சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


