News April 5, 2025
ஓசியில் சிகரெட் – வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

புதுச்சேரி அடுத்த கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ், ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ கடை வைத்துள்ளார். திலாஸ்பேட்டையைச் சேர்ந்த சசிக்குமார், குருமாம்பேட்டை கிருஷ்ணராஜ் ஆகியோர் மதுபோதையில் ஹரிஷ் கடைக்கு சென்று ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். ஹரிஷ் பணம் இல்லாது கொடுக்க முடியாது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இந்நிலையில், போலீசார் நேற்று இருவரையும் கைது செய்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கிய சபாநாயகர்

புதுச்சேரி, மணவெளியில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தவளக்குப்பம் பள்ளியில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 10,000 வழங்கினார்.
News August 11, 2025
புதுவை: ரூ.34,800 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 446 செவிலியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிப்பட்ட பல்கலைகழகத்தில் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக மாதம் ரூ.34,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் jipmer.edu.in என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 11, 2025
புதுவை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் 7 சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வெங்கடாசலத்தை தேடி வருகின்றது.