News August 13, 2024

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி

image

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி மக்கள் இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார். விழாவில் ஆண்டாள் சுப்பராயன் உள்ளிட்ட புதுச்சேரி சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐந்து பேருக்கு துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 5, 2026

புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

புதுச்சேரியில் 12 பார்களுக்கு கலால் துறை சீல்

image

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுபானங்களை ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதுபான கடைகளில் ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கலால் துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை செய்து ரசீது இல்லாமல் மது விற்பனை செய்த 12 பார்களுக்கு சீல் வைத்தனர்.

error: Content is protected !!