News March 16, 2026
ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு: ஆதவ்

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இனி மக்களின் ஆதரவோடு ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழும் என ஆதவ் ஆர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் அவதூறுகள் அனைத்தும் தோற்றுப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2026
₹18,000 சம்பளம்… டிகிரி, டிப்ளமோ போதும்

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் 450 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஸ்டைபண்டாக மாதம் ₹18,000 வழங்கப்படும். இதற்கு இந்த <
News March 26, 2026
மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக: அன்புமணி

2026 தேர்தலுக்காக புதிய தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அன்புமணி கூறியுள்ளார். 2021-ல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 439-ஐ முழுமையாக நிறைவேற்றாமல் 100% நிறைவேற்றியதாக திமுக கூறுவதாகவும், இதனாலேயே அக்கட்சி ஒரு மோசடி கட்சி என்றும் விமர்சித்துள்ளார். சிலிண்டருக்கு ₹100 மானியம், 5.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை உள்ளிட்டவை என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி மற்றும் மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. <


