News November 7, 2025

‘ஒவ்வொருவருக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டம்’

image

ஒவ்வொரு ஓட்டுக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், ₹50,000 கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் RB உதயகுமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள SIR-ல் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அதில், திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், SIR படிவங்களை திமுகவினர் பெற ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 30, 2026

அட முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா!

image

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீர்ச்சத்து எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்கும் *கல்லீரல் கொழுப்பை கரைக்க உதவும் *எலும்புகளை வலுப்படுத்தும் *காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மையை சரிசெய்யும் *உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

News January 30, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 30, தை 16 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News January 30, 2026

ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு!

image

கடவுளை கேலி செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது பெங்களூரு போலீஸ் FIR பதிவு செய்துள்ளது. கோவாவில் கடந்தாண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தது சர்ச்சையானது. இதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!