News November 7, 2025
ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம்.. கனமழை ALERT

வங்கக்கடலில் நவ.14 மற்றும் நவ.19-ல் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாள்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று(நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி, மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என IMD தெரிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
ராஜினாமா பண்ணலாம்னு இருந்தேன்: சத்யபாமா

ஒருங்கிணைப்பு பற்றி பேசியதால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக Ex MP சத்யபாமா தெரிவித்துள்ளார். தானே ராஜினாமா கடிதம் கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் EPS கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லது சொன்னால் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாகவும், EPS-ன் இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து யாரும் கருத்துகளை சொல்வதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 7, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <


