News February 24, 2026
ஒரே நாளில் 2 முறை திருமணம் செய்யும் VD – ரஷ்மிகா ஜோடி

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம் வரும் 26-ம் தேதி உதய்பூரில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெறுகிறது. காலை தெலுங்கு சடங்குகளின்படியும், மாலை கொடுவா (கர்நாடகா) சடங்குகளின்படியும், 2 முறை திருமணம் நடைபெற உள்ளது. பின்னர், மார்ச் 3-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்கும் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறகிறது.
Similar News
News April 3, 2026
டிஜிட்டல் Census.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

✱Census <
News April 3, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $108 குறைந்து $4,676-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $72-க்கு விற்பனையாகிறது. காலை 9 மணி வரை இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News April 3, 2026
விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு பயமா?

சென்னையில் விஜய்க்கு கூடிய கட்டுங்கடங்காத கூட்டத்தால், பிரசாரத்தை பாதியில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது, திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, சினிமா நடிகர்களுக்கு கூடும் கூட்டத்தை, பல ஆண்டுகளாக பார்த்து பழக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேகங்கள் கலைவதை போல அக்கூட்டம் கலைந்து போகும் எனவும் தெரிவித்துள்ளார்.


