News February 4, 2026
ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி லாபம்

இந்திய பொருள்கள் மீதான வரியை டிரம்ப் குறைத்த நிலையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளான அதானி கிரீன் எனர்ஜி 12.87%, அதானி எண்டர்பிரைசஸ் 11.89%, அதானி எனர்ஜி 10% வரை உயர்ந்தன. இதனால், நேற்று ஒரே நாளில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ₹1 லட்சம் கோடி வரை உயர்ந்து ₹13.78 லட்சம் கோடியாக அதிகரித்தது.
Similar News
News February 11, 2026
FLASH: நடிகை விசித்ரா ஹாஸ்பிடலில் அனுமதி!

நடிகை விசித்ரா மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கையில் Trips ஏற்றப்பட்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள அவர், வலிகள் வாழ்க்கையை கடினமாக்கினாலும், நம் மன வலிமையை அது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையிலுள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நீங்க விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News February 11, 2026
முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் MP பதிலடி!

கூட்டணி ஆட்சி ஒத்துவராது என <<19108663>>CM ஸ்டாலின்<<>> கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள் என்ற அவர், கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை 2006-லேயே முடிவெடுக்காதது காங்கிரஸின் தவறு எனவும் பதிவிட்டுள்ளார். 2006-ல் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உதவியால் திமுக ஆட்சி அமைத்தபோதே ’கூட்டணி ஆட்சி’ பற்றி பேசியிருக்கவேண்டும் என மாணிக்கம் கூறுகிறார்.
News February 11, 2026
நாளை ஸ்டிரைக்: தமிழக அரசு புதிய வார்னிங்!

தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திருத்தியதை கண்டித்து நாளை(பிப்.12) பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதற்கு திமுகவின் தொமுச உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாளை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.


