News January 2, 2026
ஒரே நாளில் ரூ 8.49 கோடிக்கு மதுபானம் விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.8.49 கோடி மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 5.20 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.29 கோடிக்கு என மூன்று மாவட்டத்தில் 8.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
வேலூரில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இன்று 10.01.2026 நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம், வேலூர் தாலுகா அடுக்கம்பாறை, குடியாத்தம் மேல் ஆலத்தூர், காட்பாடி சிவானூர், கே.வி.குப்பம் திருமணி மற்றும் பேரணாம்பட்டு மாச்சம்பட்டு பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
News January 10, 2026
வேலூர்: மணல் திருடியவர் அதிரடி கைது!

வேலூரை அடுத்த சேக்கனூர் கிராமத்தில் அருகே கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிலிக்கான் (தாது மணல்) கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் (48) தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
News January 10, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தி வெளியீடு!

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


