News April 1, 2025

ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

image

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 6, 2025

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று (ஏப்.,6) 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 108 வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 5, 2025

ஈரோடு அருகே ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு கோட்டை கோவலன் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (33). ஈஸ்வரன் கோவிலில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றதால், மனைவி கண்டித்துள்ளார். இதனால் தியாகராஜன் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

News April 5, 2025

ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!