News April 12, 2024
ஒரே நாளில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் நாளை (13.4.24) பரிவேந்தரை ஆதரித்து பிரதமர் மோடியும், சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 3 முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News July 9, 2025
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சியை மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் நாளை (ஜூலை 8) காலை 9 மணிக்கு தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.
News July 8, 2025
பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News July 8, 2025
பெரம்பலூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <