News May 27, 2024
ஒரே நாளில் இரட்டைக் கொலை

திருச்செந்தூர், சிறுநாடார்குடியிருப்பை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், துரைப்பாண்டி. இவர்கள் இருவரும் நேற்று(மே.26) அப்பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் உணவு பரிமாற சென்ற போது முட்டை பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமாரை துரைப்பாண்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அதேபோல் நேற்று புதுக்கோட்டை திரவியபுரத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மாமனாரை மருமகன் அடித்து கொலை செய்துள்ளார்.
Similar News
News April 8, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு<
News April 8, 2026
தூத்துக்குடியில் 694-வது நாளாக தொடரும் போராட்டம்..

தூத்துக்குடி அடுத்த பொட்டலூரணியை சுற்றியுள்ள 3 கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி, கிராம மக்கள் நேற்று 694 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். பல வழிகளில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், சுவாசிக்கவே போராடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், இதுவரை ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
News April 8, 2026
தூத்துக்குடி: தாறுமாறாக ஓடிய பஸ்; டிரைவர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நெல்லை – தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மறவன்மடம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்று, பனைமரம் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


