News April 7, 2025
ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கவே நடக்காது: துரைமுருகன்

காட்பாடியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஏப்ரல் 6) அடிக்கல் நாட்டினார். பின்னர், பேட்டி அளித்த அவர், “2029ஆம் ஆண்டுக்கு பின்னர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பணிகள் தொடங்க உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிச்சயம் அதெல்லாம் நடக்காது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமி, ஒரே சாப்பாடு’ இதெல்லாம் நடக்காது” என கூறினார்.
Similar News
News April 7, 2025
வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்கள்: கலெக்டர் அறிவிப்பு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 23ஆம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News April 7, 2025
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்பு

அரியூரில் இருந்து ஊசூர் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று (ஏப்ரல் 6) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் (35), விக்னேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.