News September 18, 2024
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆராய்ந்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இதற்கு ஆதரவாக அறிக்கை அளித்திருந்தது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். இது, சட்ட வடிவம் பெறும் போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
Similar News
News August 7, 2025
அடுத்த 3 நாள்களுக்கு ‘HEAVY RAIN’ வார்னிங்!

இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இன்று தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை மறுநாள் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News August 7, 2025
TN, SM-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: தமிழிசை

தமிழகத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என தமிழிசை வேதனை தெரிவித்துள்ளார். 2017-ல் விசிகவை சேர்ந்த நபர் ஒருவர் தமிழிசையை விமர்சித்து SM-ல் பதிவிட்டிருந்தது தொடர்பான வழக்கில் கடலூர் கோர்ட்டில் ஆஜரான பிறகு பேசிய அவர், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் எதிரி கட்சி என நினைத்து பெண் தலைவர்களை பலரும் சோஷியல் மீடியாவில்(SM) மோசமாக சித்தரித்து பதிவிடுவதாக குற்றம்சாட்டினார்.
News August 7, 2025
பாஜகவில் இருந்து அலிஷா அப்துல்லா விலகல்?

தமிழக பாஜ திறன் & விளையாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த அவரை, நயினார் வந்தபிறகு புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தனது X பக்கத்தில், திறமைக்கு அங்கீகாரம் கொடுக்காத இடத்திலும், உழைப்புக்கு உயர்வு கொடுக்காத இடத்திலும் ஒருபோதும் இருக்காதே என பதிவிட்டுள்ளார்.