News January 7, 2026

ஒரே சமயத்தில் தமிழகத்தில் முகாமிடும் மோடி, ராகுல்!

image

<<18787596>>PM மோடி<<>> வரும் ஜன.28-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதே ஜன.28 அல்லது ஜன.29-ம் தேதியில், ராகுல் காந்தியும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்., சார்பாக கிராம கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டில் ராகுல் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேசிய தலைவர்களின் வருகையால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.

Similar News

News February 4, 2026

பில் கேட்ஸ் பதில் சொல்லியே ஆகனும்: மெலிண்டா

image

<<18548710>>எப்ஸ்டீன் கோப்புகளில்<<>> வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் தனக்கு விவரிக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில் கேட்ஸின் Ex மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார். தன் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கி விட்டது என்றும், இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உள்பட அனைவரும் இதுகுறித்து எழுப்பபடும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News February 4, 2026

ஆன்லைன் கேமிங்.. பெற்றோரே உஷாரா இருங்க

image

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையானதால் <<19045972>>3 சகோதரிகள் தற்கொலை<<>> செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையை தூண்டும் சில விளையாட்டுகள் குழந்தைகளை தவறாக பாதைக்கு வழிநடத்துகின்றன. இதனால்தான் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் குழந்தைகள் SM பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளன. நம் நாட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

News February 4, 2026

அதிமுகவுடன் இணைந்தார்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

image

கொங்கு மக்கள் முன்னணி(கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் C.ஆறுமுகம், EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் முன்னணி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொமமு-வுடன் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அக்கட்சி திடீரென அதிமுகவுடன் இணைந்துள்ளது.

error: Content is protected !!