News January 28, 2025

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை 

image

சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளி தொழிலாளி பால்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவர்கள் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்து வங்கிக் கடனை முறையாக திரும்ப செலுத்தவில்லை என்பதால், வங்கியாளர்கள் தொடர்ந்து பணம் கட்ட கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பால்ராஜ் குடும்பத்துடன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News November 15, 2025

சேலத்தில் 1.95 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை

image

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது பேசிய மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 1.95 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

News November 15, 2025

சேலம்: 251-வது முறையாக வேட்பு மனுத்தாக்கல்!

image

சேலம் மாவட்டம், மேட்டூர், வீரக்கல்புதூர், ராமன் நகரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (வயது 67), கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், குன்கிமங்கலம் ஊராட்சி, 1-வது வார்டில் போட்டியிட தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதன்மூலம் 251-ம் முறையாக மனுத்தாக்கல் செய்தார். இவர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் நடக்கும் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2025

சேலம்: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- எளிய வழி!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க. யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!