News February 12, 2026
ஒரு ஸ்பூன் கிராம்பு.. சருமத் துளைகள் மறைந்துபோகும்

சமையலுக்கு மட்டுமல்ல, உங்கள் சருமப் பிரச்னைகளுக்கும் கிராம்பு சிறந்த தீர்வாக இருக்குமென சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். முகத்தில் உள்ள சருமத் துளைகள் மறைய, கிராம்பை ரைஸ் டோனருடன் சேர்த்து பயன்படுத்தலாம். இதற்கு தலா ஒரு ஸ்பூன் அரிசி, கற்றாழை ஜெல், கிராம்பு, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள். இதை வாரத்துக்கு ஒருமுறை முகத்தில் தடவிப் பாருங்கள். SHARE.
Similar News
News February 14, 2026
விஜய் எனக்கு நண்பர் தான், ஆனால்.. SP வேலுமணி

சினிமாவில் நடிப்பது போல, கரூர் சம்பவத்தை அணுகிய விஜய்க்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பளிக்காதீர்கள் என SP வேலுமணி தெரிவித்துள்ளார். தொண்டாமுத்தூரில் பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனே சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னைக்கு ஓடிய விஜய் ஒரு மாதம் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, விஜய் தனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லையே என விமர்சித்துள்ளார்.
News February 14, 2026
PM மோடியை புகழ்ந்து பேசிய திமுக MP திருச்சி சிவா!

PM மோடி விவரமானவர், அவரை குறைத்து பேசமாட்டேன் என MP சிவா பாராட்டியுள்ளார். பார்லி.,யில் அனைவருக்கும் ‘நமஸ்கார்’ என கூறும் மோடி தனக்கு மட்டும் ‘வணக்கம்’ சொல்வார் என்ற அவர், அவரவர் தாய் மொழியில் MP-களுக்கு PM கடிதம் அனுப்புவார் என்றார். மேலும், தான் குஜராத்தியில் PM-க்கு பதில் கடிதம் எழுதியது அவருக்கு மகிழ்ச்சியளித்ததாகவும், அவரவர் தாய்மொழி இருக்க ஹிந்தி எதற்கு என்றும் சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 14, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹1,280 உயர்ந்தது

தங்கம் விலை இன்று (பிப்.14) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் ₹160 உயர்ந்து ₹14,560-க்கும், 1 சவரன் ₹1,280 அதிகரித்து ₹1,16,480-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹3,120 குறைந்த தங்கம், காதலர் தினமான இன்று மீண்டும் உயரத் தொடங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை அதிகரிப்பதால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


