News December 15, 2025
ஒரு வாரத்திற்கு 4 நாள் வேலை செய்தால் போதுமா?

கடந்த மாதம் அமலான புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தொழிலாளர் அமைச்சகம், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 4 நாள் வேலை செய்வது போதுமானது; ஆனால் இது ஒரு ஆப்ஷன் மட்டுமே, நிறுவனமும் ஊழியர்களும் ஏற்று கொண்டால் இதை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *ஒன்றை அடையவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.
News December 20, 2025
கேப்டன் பதவியை இழக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

டி20 போட்டிகளில் இந்தியா அசத்தி வந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கேப்டன் என்பதால் மட்டுமே சூர்யா அணியில் விளையாடுகிறார். துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்மும் சிறப்பாக இல்லாததால் WC-ல் SKY தலைமையில் இந்தியா அணி விளையாடும். ஆனால் WC முடிந்த பின் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 20, 2025
குளிர்கால பாதிப்புகளை சமாளிக்க உதவும் ராகு கஞ்சி!

குளிர்காலம் வந்தாலே சளி தொடங்கி பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இக்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அத்தவகை உணவுகளில் ராகி கஞ்சி முதலிடத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை ராகி கூழ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் சூடாக இருக்கவும் அது உதவுகிறது. Share it


