News March 29, 2026

ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? ஏன்?

image

*ஒரு வாரத்திற்கு 5 (அ) அதற்கும் குறைவான முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட்டால் பித்தம் உண்டாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
*அதிகளவில் முட்டைகள் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மூட்டு வலி, முகப்பருக்கள், முடி உதிர்தல், ஈஸ்ட்ரோஜன், தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையின்மை ஏற்படலாம்.
*எனவே, புரதச்சத்துமிக்க முட்டையை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். SHARE IT

Similar News

News April 14, 2026

BREAKING: பின்வாங்கினார் விஜய்.. ஏமாற்றம்

image

திருப்பூரின் பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை நடைபெறவிருந்த ரோடு ஷோவை விஜய் ரத்து செய்துள்ளார். பெருமாநல்லூரில் பிரசாரத்தை முடிக்கும்போதே காலதாமதம் ஆனதால் ரோடு ஷோவை ரத்து செய்துவிட்டு அவர் கோவைக்கு திரும்பியுள்ளார். இதனால், அவரை காண பல மணி நேரம் காத்திருந்த தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். <<-se>>#TNElection2026<<>>

News April 14, 2026

AI சாட்பாட் உரையாடல்.. தற்கொலையில் முடிந்த சோகம்

image

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது நபர் AI சாட்பாட் உடன் பல வாரங்கள் தொடர்ந்து பேசியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியை பிரிந்த பிறகு ஆறுதல் தேடி Gemini உடன் பேசத் தொடங்கியுள்ளார். ஆனால், AI அவரை எச்சரிக்காமல் கற்பனைக்கு வலுவூட்டும் விதமாக ரிப்ளை கொடுத்து வந்துள்ளது. சுமார் 47,000 மெசேஜ்கள் வரை AI உடன் பேசிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

News April 14, 2026

தமிழ்நாடு 234 தொகுதிகளை பெற்றது எப்படி?

image

1963-ல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, தமிழகத்துக்கான (அன்று மெட்ராஸ் மாநிலம்) MP-க்கள் எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைந்தது. ஒரு MP தொகுதிக்கு 5 MLA தொகுதி என்ற அடிப்படையில், 195 சட்டப்பேரவை தொகுதிகளாக குறைந்தது. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவமும் குறையும். இதை ஈடுகட்ட 1 MP தொகுதி X 5 என்பதை 1 MP தொகுதி X 6 என சீரமைப்பு கமிஷன் மாற்றியதாலேயே 234 தொகுதிகள் நமக்கு கிடைத்தது.

error: Content is protected !!