News September 20, 2024

ஒரு வாரத்திற்குள் விடுதிகளை பதிவு செய்ய ஆட்சியர் காலக்கெடு

image

மதுரை மாவட்டத்தில் பெண்கள் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கும் விடுதிகளை Tamil Nadu Hostels and Homes for Women and Children (Regulation) Act 2014 ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் உள்ள மகளிர் விடுதிகள் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்துகொள்ள மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 24, 2025

மதுரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தேவாங்கு

image

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News August 23, 2025

மதுரை: வங்கியில் இருந்து பேசுவதாக நூதன மோசடி

image

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, KYC புதுப்பிப்பதற்காக உங்களுக்கு LINK அனுப்புவார்கள் அதை நம்ப வேண்டாம். உண்மையாக வங்கிகள் ஒரு போதும் தொலைப்பேசியில் KYC கேட்கமாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தா 1930 அல்லது மதுரை சைபர் கிரைம் 0452 – 2340029 எண்ணுக்கு அழையுங்க…SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!