News December 18, 2025
ஒரு பூனையோட சொத்து ₹839 கோடியா!

டைட்டிலை படிச்சதும் தலை சுத்துதா! இந்த பூனையின் பெயர் Nala. நியூயார்க்கில் வசித்துவரும் இது, Siamese – Tabby வகையை சேர்ந்தது. இந்த பூனை தனது உழைப்பால், இவ்வளவு பணத்தை சேர்த்துள்ளது. சோஷியல் மீடியாவில் மிக பிரபலமாக இருக்கும் இதற்கு கிட்டத்தட்ட 4.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். Love Nala என்ற சொந்த பிராண்ட்(செல்லப்பிராணிக்கான உணவு), Collobration மூலம் Nala இவ்வளவு பணத்தை வாரி குவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
கண்களில் கருவளையமா? இதை பண்ணுங்க

கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுவதற்கு சத்துக்குறைபாடு, தூக்கமின்மை, உடலில் நீரிழப்பு போன்றவை காரணங்களாகும். இதற்கு தீர்வு காண உருளைக்கிழங்கு போதுமானது. காலையில் உருளைக்கிழங்கு ஜூஸ் குடியுங்கள் அல்லது அதன் துண்டுகளை கண்கள் மீது 30 நிமிடங்கள் வைத்திருங்கள். அதில் உள்ள நீர்ச்சத்து கண் வீக்கத்தை குறைப்பதோடு, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் வழங்குகிறது. வாரத்திற்கு 2-3 முறை இதை முயற்சிக்கலாம்.
News December 19, 2025
பொங்கல் பரிசு.. ₹3,000, + ₹10,000 ஜாக்பாட்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் TN அரசு ₹3,000 – ₹5,000 வழங்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பிஹார் பாணியில் மகளிர் சுய தொழிலுக்காக பெண்களுக்கு ₹10,000 என்ற அறிவிப்பை வெளியிட NDA திட்டமிட்டுள்ளதாம். ஜனவரி முதல் வாரத்தில் PM மோடி (அ) அமித்ஷா இருவரில் யாரேனும் ஒருவர் TN-ல் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
News December 19, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.. இத பண்ணுங்க!

தமிழகத்தில் இன்று <<18609101>>வரைவு வாக்காளர் பட்டியலை<<>> ECI வெளியிட உள்ளது. அதில், பெயர் விடுபட்டு போனவர்கள், பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க ‘வாக்காளர் படிவம் 6’-ல் விவரங்களை பதிவு செய்து BLO-க்களிடம் வழங்கவும். அப்படிவம் சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுடையவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள். பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.


