News March 14, 2026
ஒரு தலை காதல்.. உயிருடன் எரித்து கொலை

புதுச்சேரியில் நேற்றிரவு இளம்பெண் மீது ஜோசப் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90% உடல் எரிந்த நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் இன்று காலை உயிரிழந்தார். இதற்குமுன் இருவரும் பழகி பிரிந்த நிலையில், ஜோசப் தன்னை தொந்தரவு செய்வதாக அந்த பெண் ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்திருந்தார். இருந்தும் ஜோசப் அவரை விடாமல் துரத்தி கொலை செய்துள்ளார்.
Similar News
News April 1, 2026
தொழிற்சாலையில் பயங்கர விபத்து.. 15 பேரின் நிலை?

பஞ்சாபின் லூதியானா அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் சரிந்துள்ளது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்கும் பணியில் போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News April 1, 2026
ஏப்ரல் 1 : வரலாற்றில் இன்று

*முட்டாள்கள் நாள் *1861–அரசியல்வாதி டி.என்.சிவஞானம் பிறந்தநாள் *1917–கவிஞர் திருலோக சீதாராம் பிறந்தநாள் *1935– இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கம் *1957–1 பைசா நாணயம் அறிமுகம் *1976–கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடக்கம் *2004– G-Mail சேவை தொடக்கம் *2002– பாடகர் கே.வீ.நாராயணசுவாமி நினைவு நாள் *2007– தமிழறிஞர் தி.வே.கோபாலையர் நினைவு நாள் *2007–கட்டடக் கலைஞர் லாரி பேக்கர் நினைவு நாள்
News April 1, 2026
விஜய்யை அரசியல் தலைவராக மக்கள் ஏற்கவில்லை: CPM

திரையில் பார்த்த நடிகர் தெருவுக்கு வந்திருக்கிறார் என்பதால் விஜய்யை பார்க்க கூட்டம் கூடுவதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். விஜய்யை ஒரு மாற்று அரசியல் தலைவராகவும், ஆட்சி மாற்றத்திற்கான நபராகவும் கடுகளவு கூட மக்கள் ஏற்க வாய்ப்பில்லை என அவர் கூறினார். மேலும், மே.4 அன்று விஜய்க்கு கூடிய கூட்டமானது வேடிக்கை பார்க்க வந்தவர்களா அல்லது அவரது அரசியலுக்காக பின்தொடர்ந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்றார்.


