News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

ஈரோடு மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News February 10, 2026

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தையலர், ஓட்டுநர், பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு உதவும் இதை SHARE பண்ணுங்க!

News February 10, 2026

அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

image

ஈரோடு மாவட்டத்தின் 10 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய <>கிளிக்<<>> பண்ணுங்க! SHAREIT

News February 10, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!