News December 31, 2025
ஒருவருக்கு ₹13.48 கோடி சம்பளம் வழங்கும் OpenAI!

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.
Similar News
News January 9, 2026
பொடுகு பிரச்னையில் இருந்து மொத்தமாக விடுபட..

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் தீர்வளிக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின், இதனை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு முடியை குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகு, அதனால் ஏற்படும் முடி உதிர்வு குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.
News January 9, 2026
3 போட்டிகளில் திலக் வர்மா கிடையாது: BCCI

விஜய் ஹசாரே தொடரின் போது, கடும் வயிற்றுவலியால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட திலக் வர்மாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் திலக் பங்கேற்க மாட்டார் என BCCI அறிவித்துள்ளது. அவரின் உடல் தகுதிக்கு ஏற்ப கடைசி 2 போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


