News March 17, 2026
ஒருநாள் தோனி என் இடத்தில் இருப்பார்: கம்பீர்

உங்களின் புன்னகை அழகாக உள்ளது என T20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கம்பீரை தோனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தன்னை தோனி சிரிக்க சொன்னதில் மகிழ்ச்சி என்று கம்பீர் கூறியுள்ளார். மேலும், பயிற்சியாளராக தன்னுடைய இடத்தில் தோனி ஒருநாள் இருப்பார் என்ற கம்பீர், அப்போது தானும் அவரை சிரிக்கச் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ‘இப்போதான் களம் சூடுபிடிக்குது’ என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 7, 2026
கருணாநிதிக்கு கேப்டன் மீது அவ்வளவு பாசம்: பிரேமலதா

இவ்வளவு நாள் தவறான கூட்டணியில் இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். கருணாநிதிக்கு விஜயகாந்த் மீது அவ்வளவு பாசம் என்ற அவர், கருணாநிதி CM-ஆக இருந்தபோது சந்திக்க நேரம் கேட்டால் அடுத்த 5-வது நிமிடம் ’வா’ என போன் வரும் என்றார். இதை நினைக்கும்போது ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையவில்லை என Feel பண்ணுவதாகவும் கருணாநிதி & விஜயகாந்தின் ஆசிர்வாதத்தால் தற்போது கூட்டணி அமைந்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
News April 7, 2026
காங்., வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

விளவங்கோடு தொகுதியின் காங்., வேட்பாளர் டி.டி.பிரவீனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். TN, கேரளாவில் வாக்குரிமை வைத்திருப்பதாக வாதிட்டு, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதேநேரம், மேலூர் தொகுதியின் காங்., வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
News April 7, 2026
மரண தண்டனைக்கு எதிரானவன்: கமல்

தனிப்பட்ட முறையில் தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என கமல் பதிவிட்டுள்ளார். சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கொடுங்குற்றம் இழைத்தவர்கள் சலுகைகள் இன்றி ஆயுள் உள்ளவரை சிறை வைக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துவிட்டனரே என்று குறிப்பிட்டுள்ளார்.


