News August 12, 2025
ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த் (28). பூக்கடை நடத்தி வரும் இவரை கடந்த 25.1.2025 அன்று புதுச்சேரி பாகூர் பங்களா தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி (26) என்பவர் கொலை செய்தார். பின்னர் கடலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வந்து தலைமறைவானார். இதையடுத்து ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 12, 2025
சிதம்பரம்: தாயுமானவர் திட்டம் தொடங்கி வைப்பு

முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதையடுத்து சிதம்பரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ-வுமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
News August 12, 2025
கடலூர்: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
News August 12, 2025
கடலூர் மாவட்டத்தில் ஆணவக் கொலை ?

விருத்தாசலம் அரசக்குழியை சேர்ந்த முருகன்-ஜெயா தம்பதியர் மகன் ஜெயசூரியா (19). இவர், கடந்த மே மாதம் 18-ந்தேதி மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது பெற்றோர்கள் கூறுகையில், ‘என் மகன் வேறு சாதி பெண்ணை காதலித்ததால், அவனை ஆணவக் கொலை செய்துள்ளனர். என் மகன் இறப்பில் சந்தேகம் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.