News March 28, 2025

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களது பகுதியில் உள்ள நிறைகுறைகள் மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து விவாதம் மேற்கொண்டனர்.

Similar News

News April 9, 2025

காஞ்சிபுரம்: பாவங்களை போக்கும் சித்ர குப்தர்

image

நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்

News April 9, 2025

காஞ்சிபுரத்தில் ரூ.1000 கோடி முதலீடு: 5000 பேருக்கு வேலை

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோபேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னனு உற்பத்தி சேவை திட்டத்தை நிறுவுவதற்கு ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டத்தால் புதிதாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என கூறப்படுகிறது. SHARE TO FRIENDS

News April 9, 2025

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

image

பரந்தூர் விமானநிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!