News January 23, 2025
ஒன்றிய குழுவிடம் நாகை எம்.பி கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு ஒன்றிய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
Similar News
News January 30, 2026
திருவாரூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாளேஸ்வரர் கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாதாளேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News January 30, 2026
திருவாரூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

திருவாரூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


