News August 20, 2024
ஒன்றரை வயது குழந்தையை கடித்த நாய்கள்

வாலாஜாபாத் அடுத்த நாய்க்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் – சுவேதா தம்பதியர். இவர்களது ஒன்றரை வயது குழந்தை பவிஷ் இன்று காலை விளையாடி கொண்டிருந்தபோது, தெரு நாய்கள் சரமாரியாக கடித்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை வாலாஜாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
Similar News
News August 25, 2025
நாளை இங்கெல்லாம் ’உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி, முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
News August 25, 2025
காஞ்சிபுரம்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News August 25, 2025
காஞ்சிபுரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27237139 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.