News June 16, 2024

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

image

பள்ளிபாளையம் தனியார் நூற்பாலை உரிமையாளர் ஜெகநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான பெருமாள் என்பவர் நேற்று நாமக்கல்லில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர் .
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News October 31, 2025

நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு காவல்துறையின் தகவல் நம்முடைய பாஸ்போர்ட், ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தேவை இல்லை. தற்பொழுது services.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்து உரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு!

News October 31, 2025

நாமக்கல்: புதிய பொலிவுடன் சித்த மருத்துவமனை!

image

நாமக்கல் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன ஆயுர்வேதம் யோகா யுனானி சித்த ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்து சிறப்பம்சங்களும் சித்த பிரிவுக்கு 60 படுக்கைகளும் ஆயுஷ் பிரிவுக்கு 50 படுக்கைகளும் இது தவிர நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன (நவ-2ல்) திறப்பு விழா நடைபெற உள்ளது.

News October 31, 2025

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!