News March 14, 2025
ஒண்டிப்புதூரில் ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அடுத்த, சுங்கம் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே கேட்டை, கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் மீது, ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போத்தனூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
SSLC பொதுத்தேர்வு: 38,390 மாணவர்கள் எழுதுகின்றனர்

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News March 10, 2026
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று துவங்கியது

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.
News March 10, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


